சில மனிதர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டம் எப்பொழுதும் எப்படி?
சில மனிதர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டம் எப்பொழுதும் எப்படி?
நாம் அன்றாட வாழ்க்கையில் சிலரை பார்த்தால் பெருமையாகவும், பொறாமையாகவும் இருக்கும்.
நம்மை போல் அல்லது நம்மை விட குறைவான தகுதியோ அல்லது உழைப்போ இருக்கும் உறவினர், நண்பர், பக்கத்துக்கு வீட்டுக்காரர் நம்மை விட நல்ல வேலையிலோ அல்லது நம்மை விட ஒரு படி மேலயோ இருப்பதை பார்த்திருப்போம். அவர்களை பார்க்கும் போது நமக்கு தோன்றுவது ஒன்றுதான். அவர் கள் அதிர்ஷ்டக்காரர்கள். அதிர்ஷ்டம் கூரையை பிறித்துக்கொண்டு கொட்டுகிறது என்று தான் தோன்றும்.
அதிர்ஷ்டம் என்று ஒன்று உள்ளதா? அது உண்மை தானா? நமக்கும் எப்படி அது கிடைக்கும். வாருங்கள் பார்க்கலாம்.
ப்ரொபசர் ரிச்சர்டு வைஸ்மேன் (ஹெட்போர்ட்ஷையர் பல்கலைக்கழகம்) ஒரு மனோதிட வல்லுநரின் ஆராச்சி முடிவின் கூற்றை இவ்வாறு கூறுகிறார்.
பத்து வருடங்களுக்கு முன்னர் அதிர்ஷ்டம் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியதாக கூறுகிறார். அவர் எப்படி சிலர் மட்டும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கிறார்கள், மற்றவர்கள் ஏன் தொடர்ச்சியாக தோல்வியை தழுவுகிறார்கள் என்பதை அறிய விரும்பினார்.
முதல் வேலையாக, தொடர்ச்சியாக அதிர்ஷ்டத்தை அனுபவித்தவர்களும், அனுபவிக்காதவர்களும் தன்னை அணுகும் படி ஒரு செய்தித்தாளில் விளம்பரம் செய்தார்.
அவரின் விளம்பரத்தை பார்த்து ஏராளமானவர்கள் அவரின் ஆராய்ச்சிக்கு உதவுவதாக தாங்களாக முன் வந்தனர். சில வருடங்களாக அவர்களை நேர்காணல் செய்தார். அவர்களின் வாழ்வு முறையை கண்காணித்தார். அவர்களை ஒரு சோதனைக்கு உட்படுத்தினார்.
அவர்களிடம் ஒரு செய்தித்தாளை குடுத்து அதில் எத்தனை படங்கள் உள்ளன என்பதை கண்டறிந்து சொல்லுமாறு கூறினார்.
செய்தித்தாளின் நடுப்பக்கத்தில் அரை பக்க அளவிற்க்கு ஒரு செய்தியை அவர் பிரிண்ட் செய்திருந்தார். அந்த செய்தியில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் இரண்டு இன்ச் அளவிற்க்கு இருக்குமாறு அந்த செய்தியை பிரிண்ட் செய்திருந்தார். அந்த செய்தி "இந்த செய்தியை நீங்கள் பார்த்தவுடன் என்னிடம் தெரிவித்து 500 ரூபாய் பெற்றுக்கொள்ளவும்".
அதிர்ஷ்டசாலிகள் அந்த செய்தியை கவனித்ததாகவும், அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக கருதியவர்கள் அதை கவனிக்கத் தவறியதாகவும் கூறினார்.
பொதுவாக அதிர்ஷ்டம் இல்லாதவர்களாக கருதியவர்கள், அதிர்ஷ்டசாலிகளை விட மிகவும் பரபரப்பாகவும், டென்ஷனாக இருந்ததையும் கவனித்தார். அவர்கள் அந்த செய்தியை கவனிக்க தவறுவதற்கு இந்த பரபரப்பு தான் காரணம் என்பதையும் கண்டறிந்தார்.
அவர்கள் வாய்ப்பை தவற விட்டதற்கு சொன்ன வேலையை மட்டுமே செய்வதில் கவனமாக இருந்தது மேலும் ஒரு காரணம் என்பதையும் கண்டறிந்தார். அவர்கள் எதாவது பார்ட்டிக்கு சென்றால் முழு கவனமும் தனக்கு பொறுத்தமான துணையை தேடுவதிலேயே இருப்பதால் நல்ல நட்பு உண்டாக்கும் வாய்ப்பை தவற விடுகிறார்கள்.
அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் செய்தித்தாளில் வேலை தேடும்போது ஒரு சில குவாலிஃபிகேஷன் உள்ள வேலையை மட்டுமே தேடுவதால் அதில் உள்ள வேறு சில நல்ல வேலையை கவனிக்கத் தவறி விடுகிறார்கள்.
அதிர்ஷ்டசாலிகள் மிகவும் ரிலாக்ஸாக, திறந்த மனதுடன் செயல் படுவதால் அவர்கள் அணைத்து வாய்ப்புகளையும் கவனிப்பதாகவும் கூறினார்.
ஆராய்ச்சியின் முடிவில் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதற்கு கீழ்க்கண்ட நான்கு காரணங்கள் தேவை என்றார்.
1. நம் உள்மனது சொல்வதை கேட்டு முடிவெடுக்க வேண்டும் - பெரும்பாலும் அது சரியான முடிவாக தான் இருக்கும்
2. புது எண்ணங்களுக்கு, வாய்ப்புகளுக்கு எப்பொழுதும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். செய்ததையே திரும்ப திரும்ப செய்யும் சூழலை மாற்ற தயாராக இருக்க வேண்டும்
3. தினமும் சிறிது நேரம் ஒதுக்கி அன்றைய தினத்தில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூறவேண்டும்
4. முக்கியமான மீட்டிங் அல்லது போன் கால் பேசும் முன்னர் நீங்களே உங்களை அதிர்ஷ்டசாலிகளாக மனதில் கற்பனை செய்து கொள்ளவும்
உலகில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ள மனிதர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று அர்த்தம் அல்ல. அவர்கள் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்பதை கற்றவர்கள்.
வரும் நாட்கள் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமைய என் வாழ்த்துக்கள். 😁😁😁
Comments
Post a Comment