சில மனிதர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டம் எப்பொழுதும் எப்படி?
சில மனிதர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டம் எப்பொழுதும் எப்படி? நாம் அன்றாட வாழ்க்கையில் சிலரை பார்த்தால் பெருமையாகவும், பொறாமையாகவும் இருக்கும். நம்மை போல் அல்லது நம்மை விட குறைவான தகுதியோ அல்லது உழைப்போ இருக்கும் உறவினர், நண்பர், பக்கத்துக்கு வீட்டுக்காரர் நம்மை விட நல்ல வேலையிலோ அல்லது நம்மை விட ஒரு படி மேலயோ இருப்பதை பார்த்திருப்போம். அவர்களை பார்க்கும் போது நமக்கு தோன்றுவது ஒன்றுதான். அவர் கள் அதிர்ஷ்டக்காரர்கள். அதிர்ஷ்டம் கூரையை பிறித்துக்கொண்டு கொட்டுகிறது என்று தான் தோன்றும். அதிர்ஷ்டம் என்று ஒன்று உள்ளதா? அது உண்மை தானா? நமக்கும் எப்படி அது கிடைக்கும். வாருங்கள் பார்க்கலாம். ப்ரொபசர் ரிச்சர்டு வைஸ்மேன் (ஹெட்போர்ட்ஷையர் பல்கலைக்கழகம்) ஒரு மனோதிட வல்லுநரின் ஆராச்சி முடிவின் கூற்றை இவ்வாறு கூறுகிறார். பத்து வருடங்களுக்கு முன்னர் அதிர்ஷ்டம் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியதாக கூறுகிறார். அவர் எப்படி சிலர் மட்டும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கிறார்கள், மற்றவர்கள் ஏன் தொடர்ச்சியாக தோல்வியை தழுவுகிறார்கள் என்பதை அறிய விரும்பினார். முதல் வேலையாக, தொடர்ச்சியாக அதிர்ஷ்டத்தை...