Posts

மனிதம்.. உறவுகளை நேசிப்போம்... சிறுகதை

என்னங்க...!! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்,இல்ல உங்க அம்மா இருக்கணும்.... யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க".. என்ன லதா என்ன பண்ணுச்சி அந்த கிழவி. நீ ஏன் டென்சனாகுறே....!! எனக்கு பிடிக்கலை அவ்வளோ தான்.....!! சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க..... மறுநாள் காலை.....!! அம்மா நீ சீக்கிரம் கிளம்புமா..!!  " எங்கேடா மகேஷ்.....??? " " உன்னை ஹோம்ல சேர்த்துடுறேன் மா...!! அங்கே உனக்கு எல்லா வசதியும் கிடைக்கும்.....!! உன்னை போல நிறைய பேர் இருப்பாங்க....!! அவங்க கூட நீ சந்தோசமா இருக்கலாம் மா......! மகேஷ் எனக்கு இங்க என் பேரக்குழந்தைங்க கூட இருக்கறதுதான்டா சந்தோசம்......!! உங்கப்பா சாகும்போது உனக்கு வயசு எட்டு....!! உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் சொல்லி புரியாது...!! எல்லா கஷ்டமும் தீர்ந்து, இப்போதான் நான் பேரக்குழந்தைங்க கூட கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்டா.....!! என் கடைசி காலத்தை இங்கேயே கழிச்சிட்டு போயிடுறேன்டா...!! " உன்னை இப்போ விளக்கம்லாம் கேக்கல நான்....!! உயிரை வாங்காமல் கிளம்பு... "என்று கொஞ்சம் அதட்டல் தோனியில் மகேஷ் சொல்ல, கலங்கி போய் நின்றாள்

சில மனிதர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டம் எப்பொழுதும் எப்படி?

சில மனிதர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டம் எப்பொழுதும் எப்படி? நாம் அன்றாட வாழ்க்கையில் சிலரை பார்த்தால் பெருமையாகவும், பொறாமையாகவும் இருக்கும். நம்மை போல் அல்லது நம்மை விட குறைவான தகுதியோ அல்லது உழைப்போ இருக்கும் உறவினர், நண்பர், பக்கத்துக்கு வீட்டுக்காரர் நம்மை விட நல்ல வேலையிலோ அல்லது நம்மை விட ஒரு படி மேலயோ இருப்பதை பார்த்திருப்போம். அவர்களை பார்க்கும் போது நமக்கு தோன்றுவது ஒன்றுதான். அவர் கள் அதிர்ஷ்டக்காரர்கள். அதிர்ஷ்டம் கூரையை பிறித்துக்கொண்டு கொட்டுகிறது என்று தான் தோன்றும். அதிர்ஷ்டம் என்று ஒன்று உள்ளதா? அது உண்மை தானா? நமக்கும் எப்படி அது கிடைக்கும். வாருங்கள் பார்க்கலாம். ப்ரொபசர் ரிச்சர்டு வைஸ்மேன் (ஹெட்போர்ட்ஷையர் பல்கலைக்கழகம்) ஒரு மனோதிட வல்லுநரின் ஆராச்சி முடிவின் கூற்றை இவ்வாறு கூறுகிறார். பத்து வருடங்களுக்கு முன்னர் அதிர்ஷ்டம் பற்றிய ஆராய்ச்சியை தொடங்கியதாக கூறுகிறார். அவர் எப்படி சிலர் மட்டும் சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கிறார்கள், மற்றவர்கள் ஏன் தொடர்ச்சியாக தோல்வியை தழுவுகிறார்கள் என்பதை அறிய விரும்பினார். முதல் வேலையாக, தொடர்ச்சியாக அதிர்ஷ்டத்தை

மனித வாழ்வின் ரகசியம்

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார், "நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய். இதற்கு கழுதை சொன்னது "நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்." கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார் "நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்."  இதற்கு நாய் கூறியது, "கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்" கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.  அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார் "நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்" கடவுளும் குரங்கின்ஆசையை நிற

தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்: சிறுகதை

"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்... அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்... பண்டிதர் சிரித்தபடியே,"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்... வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை... வேலையை ஆரம்பித்தார்... 'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்... பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்... "ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது... உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?" இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை. "நல்ல சந்தேகங்க சாமி... நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்.

மாமனிதர்களின் தத்துவங்கள்

வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை                                                               –A .P . J . அப்துல்கலாம் 🚩🚩 தன்னை அறிந்தவன் ஆசை பட மாட்டான் உலகை அறிந்தவன் கோவப்பட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பப்பட மாட்டான்                                     –பகவத் கீதை 🚩🚩 யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே ஒரு சமயம் நீ  மாற்றினால் ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டி இருக்கும்                                         –கண்ணதாசன் 🚩🚩 ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட தோற்றது எப்படி என்று யோசித்து பார் நீ ஜெயித்து விடுவாய்                                                                 -ஹிட்லர் 🚩🚩 அவமானங்களை சேகரித்து வை வெற்றி உன்னை தேடி வரும்                                                                   -A .R . ரகுமான் 🚩🚩 தோல்வி உன்னை துரத்துகிறது என்றால் வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்                                        

கடவுள் நம்மை காப்பாத்துவார்

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார் . அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . அடிக்கடி கோவிலுக்கு போவார். கடவுளை வேண்டிக்குவார் . அதுக்கப்புறம் காட்டுக்கு போவார். விறகு வெட்டுவார் .அதை கொண்டு போய் விற்பனை செய்வார் . ஓரளவுக்கு வருமானம் வந்தது . அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார் . ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார் . அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை . எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. !  அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் .. அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம் "இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார் இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது.. அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார் , ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார் அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்ச