தலைக்கனம் நம் தலையெழுத்தை மாற்றி விடும்: சிறுகதை
"என்னப்பா! முடி வெட்ட எவ்வளவு? சவரம் பண்ண எவ்வளவு?" என்றார்... அவரும், "முடிவெட்ட நாலணா, சவரம் பண்ண ஒரணா சாமி!" என்று பணிவுடன் கூறினார்... பண்டிதர் சிரித்தபடியே,"அப்படின்னா, என் தலையை சவரம் பண்ணு..." என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்... வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை... வேலையை ஆரம்பித்தார்... 'நாவிதர் கோபப்படுவார்' என்று எதிர்பார்த்திருந்த பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான்... பின்னர், பண்டிதர் அடுத்த கணையைத் தொடுத்தார்... "ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது... உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே... அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க...?" இந்தக் கேள்வி நாவிதரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை. "நல்ல சந்தேகங்க சாமி... நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது. முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க, நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனால தான் நாங்க நாவிதர்கள்....